“Dare to live the life you’ve always wanted.”
- அப்படி தான் அந்த வாக்கியத்துக்கு ஏற்றது போலவே என் வாழ்க்கையை நான் சில காலங்களாக அமைத்து கொண்டேன் என்றே சொல்லலாம். பல இடங்களுக்கு சென்று வந்து இருக்கிறேன், இனி வரும் காலங்களில் செல்லவும் திட்டமிட்டு இருக்கிறேன்.
தனுஷ்கோடி - 1964ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாவில் ஓர் புயலில் சிக்கி சிதைந்து போன ஊர். பல நாட்கள் இந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என மனதிற்குள் ஓர் ஆசை. ஓர் டிசம்பர் மாதம் நண்பர்களுடன் மூணார் சென்று விட்டு மதுரை வழியாக சென்னை திரும்பி கொண்டிருந்தோம். வைகை எக்ஸ்பிரஸில் டிக்கேட் புக் செய்து வைத்து இருந்தோம். என்னுடன் வந்தவர்கள் அனைவரும் சென்னையில கிறிஸ்மஸ் கொண்டாட ஊர் திரும்ப, நாம என்ன பண்ணலாம் னு மனசுல யோசனை. அப்போ மணி காலையில ரெண்டரை இருக்கும். சரி! நாம ரொம்ப நாளா போகணும் அப்படி னு ஆசைப்பட்ட தனுஷ்கோடி இங்க இருந்து பக்கம் தான, ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம் னு நானே டிசைட் பண்ணி ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு தனுஷ்கோடி போக ப்ளான் போட்டேன்.
காலையில மதுரை ரயில்வே ஸ்டேஷன் ல குளிச்சி ரெடி ஆயிட்டு, மதுரையின் நாயகி மீனாட்சியம்மன் கோயிலுக்கு போய் ப்ளசிங்க்ஸ் வாங்கிட்டு , மதுரை கிழக்கு மாட வீதியில சுட சுட இட்லி சாப்பிட்டுட்டு, மதுரை எம்.ஜி.ஆர் பஸ் ஸ்டான்ட் , அதாங்க நம்ம மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்ட் போனேன். அங்க போயி ராமநாதபுரம் போற ஓன் டூ ஓன் பஸ் ல ஏறினேன். டிரைவர்க்கு பக்கத்துல சீட் தான் நம்ம ஆல் டைம் பேவரைட். உட்கார பேவரைட் சீட்டும் கிடைக்க பயணம் செமைய ஸ்டாடட் ஆச்சி. ராமநாதபுரம் போயி அங்க இருந்து ராமேஸ்வரம் போற பஸ்ல , நான் போகனும்னு நினைச்ச ஊர்க்கு போயிட்டு இருக்கேன்.
மண்டபம் தாண்டி கடல் மேலே நம்ம சங்கர் சிமெண்ட் ல கட்டுன பாம்பன் கடல் பாலத்துல பஸ் சீறி பாய்ந்து போக மன்னார் வளைகுடா கடல் மேலே கட்டப்பட்டு இருந்த அந்த கட்டுமான பேரழகின் மீது ஈர்க்கப்பட்டு அடுத்த ஸ்டாப்ல பஸ்ல இருந்து இறங்கிட்டேன்.
ஆங்கிலேயர் காலத்தில தீவு நகரமான ராமேஸ்வரத்துக்கு கடல் மேலே பாலம் கட்ட முடிவு பண்ணி 2.3 கி.மீ. க்கு இந்தியாவின் முதல் கடல் பாலம் கட்டுனாங்க. இந்தியாவுல ரம்மியமான ரயில் பயணம் போக சிறந்த வழித்தடம் னு இணையத்தில் கொட்டிக் கிடக்குற எல்லா பக்கத்தின் பட்டியல் யும் பாம்பன் ரயில் பாலம் நீங்கா இடம் பிடிச்சிருக்கும். அப்படிப்பட்ட பாலத்துக்கு பக்கத்துல போயி பக்கனும் னு , பஸ்ல இருந்து இறங்கி , மீண்டும் பாம்பன் தரைவழி பாலத்துல நடந்து அப்படியே பக்கத்துல இருக்க மீனவ கிராமம் வழியா பாம்பன் பாலத்துக்கு போனேன்.
வாழ்க்கையில ஒரு வாட்டி ஆச்சி பாம்பன் பாலத்து மேலே ரயில் ல போகனும் ஆசைப்பட்ட எத்தனையோ மனிதர்களின் சந்தோஷமான தருணங்களையும், 1964 ஆம் வருசம் இந்த பாலத்து மேலே வந்த தனுஷ்கோடி பாசஞ்சர் ட்ரையின் அடிச்ச புயல்ல மாட்டி 150 பேர் மாண்டு போனாங்க. அவங்களோட சோகமான வடுவையும் சுமந்துட்டு நூறு வயச கடந்து அப்பிடியே கெத்தா நிக்குது பாம்பன் ரயில் பாலம்.
பள்ளிக்கூடம் போகாம சில பசங்க பாலத்தின் பக்கத்துல விளையாடிட்டு இருக்க, சிலர் பாலத்து மேலே நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்போ அங்க, ஒரு ரயில், மண்டபம் ல இருந்து கடல் பாலத்து மேலே அன்ன நட போட்டு வர மாறி மெதுவா ஊர்ந்து வந்துச்சி. அந்த ரயில் கூட ஒரு செல்ஃபி ய போட்டுட்டு ரயில் பாலத்த ரசிச்சிட்டு இருக்கும் போது தா அந்த சம்பவம் நடந்துச்சி.
ரயில் கடந்து போனதும் அந்த மண்ணின் மைந்தர்களான சில மீனவ இளைஞர்கள் கைலி கட்டிக்கிட்டு ரயில் பாலத்து மேலே ஓடுனாங்க. அப்போ இத பார்த்துட்டு இருந்த நான் அதுல ஒருத்தர பார்த்து,
"எங்க அண்ணா போறீங்க? ".
"பாலம் தூக்க போகுது தம்பி! ".
"நா வரலாமா அத பார்க்க?"
"சரி வா! "
எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடல் அவ்வளவு தான்.
கைப்பிடி எதுவும் இல்லாத அந்த பாலம் , கீழே பார்த்த கடல் அலை ஆர்ப்பரிக்குது, தனியே நான் முதுகில் பையை மாட்டிக்கிட்டு கைல ஜர்க்கின வச்சிக்கிட்டு பாலத்து மேலே அந்த அண்ணா வ பின் தொடர்ந்து நடந்து போனேன். ஒரு 200 மீ கடல் மேலே இருக்க தண்டவாளத்துல நடந்து போனதும் பாம்பன் தூக்கு பாலம் வந்துச்சி.
ஏதே இயந்திரத்த வச்சி பாலத்த தூக்குவாங்கனு பார்த்த அங்க தா எனக்கு ஷாக். பாலத்தின் நான்கு முனையில ஐந்து பேர் விதம் ஏறி நின்னுக்கிட்டாங்க அந்த பாலத்தின் மீது ஓடிய மீனவ நண்பர்கள். அப்போ தா சொன்னாங்க அவங்க தா பாலத்த தூக்க போறாங்க னு. அப்போ ஒருத்தர் என்ன பார்த்து, மேலே வாடா தம்பி பேக் எல்லாதையும் கீழ வச்சிட்டுனு சொல்ல , அந்த பாலத்தோட ஒரு முனையில நானும் ஏறி நின்னுக்கிட்டு அங்க இருக்கவங்கக்கிட்ட பேசிட்டு இருந்தேன்.
கையால 20 க்கும் அதிகமானவங்க இரும்பு ராடை சுத்தி பாலத்த தூக்குவாங்களாம்.
அவங்களோட தொழில் மீன் பிடிக்குறது. வாரத்துல ஒரு வாட்டி இந்த பாலத்த திறப்பாங்களாம். அப்போ அத திறக்க உதவிக்கு வர இவங்களுக்கு 200 ரூபாய் கூலியாம். பார்ட் டைம் ஜாப் மாறி. பெரிய கப்பல் ,போட்லா இதுக்குனு இருக்கிற ஆபீஸூல காசு கட்டுனாதா பாலத்த தாண்டி போகவே முடியுமாம்.
இவங்க எல்லாரையும் காண்ட்ராக்ட் அடிப்படையில கூட்டிட்டு வந்த பெரியவர் எங்க கூட பாலத்து மேலே ஏறி நின்னுக்கிட்டு சத்தமா பாட்டு பாடி கத்திக்கிட்டே இரும்பு ராட சுத்துறவங்கல உற்சாகப்படுத்திட்டு இருந்தார். அதிகாரி ஒருத்தர் வந்து உத்தரவு குடுத்ததும் பாலத்த அந்த இளைஞர்கள் தூக்க ஸ்டாட் பண்ணாங்க. இத நான் மொபைல் ல போட்டோ வீடியோ னு மெமரி புல் ஆகுற வரைக்கும் எடுத்து தள்ளிட்டேன். லைன்ஆ படகுல, பாலத்த கடந்து போக அணிவகுத்து பாலத்தோட ஒரு பக்கம் நிக்க, அத பார்த்தா கொள்ள அழகு. பாலம் மெல்ல தூக்க ஸ்டாட் ஆனதும், நின்னுட்டு இருந்த போட்ல பாலத்த கடந்து சீறி பாய்ச்சு பாம்பன் துறைமுகத்த பார்த்து போச்சு.
பாலத்த படகுல கடந்து போற அந்த அழக தரைவழி பாலத்துல நின்னு பொதுஜனம் பார்த்து ரசிச்சிட்டு இருந்தாங்க. ஆன நான் அந்த பாலத்து மேலேயே நின்னு பார்த்து ரசிச்சிட்டு இருந்தேன். சில தருணங்கள் எல்லாருக்கும் கிடைக்காது. அப்படியான சில தருணங்கள் நமக்கு கிடைச்சி நமக்கு வர சந்தோஷம் அளவிட முடியாதது, வார்த்தைகளால விவரிக்க முடியாதது. வாழ்க்கையில மறக்கவே முடியாத அப்படியான ஒரு தருணம் எனக்கு. இது மாறியான வித்தியாசமான அனுபவம் வேற யாருக்காவது கிடைச்சி இருக்குமா னு தெரியாது, ஆனா எனக்கு கிடைச்சிருக்கு என் ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்றதுக்கு.
உத்தரவு தந்த அந்த அதிகாரிக்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு, அங்க என்ன கூட்டிட்டு போன அண்ணாக்கும் அங்க இருந்தவங்களுக்கும் "தேங்க்ஸ்" சொல்லிட்டு , நான் ரொம்ப நாளா போகனும் னு ஆசைப்பட்ட, மனிதர்கள் வாழவே தகுதியில்லாத நகரமா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இயற்கையின் கொடை தனுஷ்கோடியை நோக்கி என் பயணம் தொடர்ந்தது.....
குறிப்பு : இது போன்று தனியாகவோ அல்லது அனுமதி இல்லாமல் பாம்பன் பாலத்தின் மேல் அல்லது பாம்பன் ரயில் பாலத்தின் மேல் செல்வது சட்டவிரோதம். தயவு செய்து அதை முயற்சி செய்யாதீர்கள். எனக்கு அந்த மீனவ நண்பர்கள் மற்றும் உத்தரவு தரும் அதிகாரியின் எதிர்ப்பாராத உதவியால் அங்கு செல்ல முடிந்தது. இல்லையென்றால் அங்கு சென்றே இருக்க மாட்டேன்.